ஜெயலலிதா மரணத்திற்கு முதல் முக்கிய காரணமே திமுக தான்- துணை முதல்வர் பிரச்சாரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணத்திற்கு முதல் முக்கிய காரணமே திமுக தான் என நேற்றைய பிரச்சாரத்தில் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசும்போது, ''திமுக ஆட்சிக் காலத்தில் சமூக நீதிப் பாதுகாப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதா?. மேலும் ஸ்டாலினின் முதல்வர் கனவு வெறும் கனவாகவே போகும் எனவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி முடிந்து போன வழக்குகளை மீண்டும் மீண்டும் புதுப்பித்து அதன் மூலம் ஜெயலலிதா அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி அவரை மரணமடைய செய்ததே திமுக தான்.
ஒருவருக்கு என்னென்ன கெடுதல்கள் செய்ய வேண்டுமோ அதை செய்வதில் திமுகவினர் வல்லவர்கள்" இவ்வாறு துணை முதல்வர் பன்னீர் செல்வம் பிரச்சாரத்தில் பேசினார்.