அப்போவே... அஜீத்துக்காக பக்கா ஸ்கெட்ச் போட்ட ஜெயலலிதா.... - நைசாக நழுவிய ‘தல’.. - தீயாய் பரவும் தகவல்...!
நடிகர் அஜீத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தொடக்கத்தில் அஜீத் காதல் மன்னனாகவும், சாக்லேட் பாய் ஆகவும்தான் திகழ்ந்தார்.
“அமர்க்களம்”, “தீனா” போன்ற திரைப்படங்களையடுத்து ஆக்சன் ஹீரோவாக மாறினார். இதனால், ரசிகர்கள் இவரை ‘தல’ என்று அழைக்க ஆரம்பித்தனர். அஜீத் தன்னுடைய ரசிகர்களுக்கு குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அவ்வப்போது அட்வைஸ் கொடுத்து வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் ரசிகர் மன்றங்களையே அவர் கலைத்துவிட்டார். மேலும் “அல்டிமேட் ஸ்டார்” என்ற பட்டத்தையும் துறந்துவிட்டார்.
ஸ்கெட்ச் போட்ட ஜெயலலிதா
பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில், நடிகர் அஜீத்தை அரசியலுக்குள் நுழைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சி செய்தார் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
அஜீத்தை அரசியலுக்குள் நுழைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எவ்வளவோ முயற்சி செய்தார்.
ஜெயலலிதாவுக்கு அஜீத்தை ரொம்ப பிடிக்கும். தன் மகனைப் போலவே அஜீத்தை பார்த்தார். அஜீத்குமார்-ஷாலினி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா ரொம்ப மகிழ்ச்சியாகவே பங்கேற்றார்.
ஒரு சமயம் ஜெயலலிதா அஜீத்தை அணுகி, என் கட்சியில் சேர்ந்து ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்டாராம். அதற்கு அஜீத், ‘நான் நடிக்கவே வந்தேன். ஆதலால் என்னை விட்டுவிடுங்கள்’ என கூறி மறுத்துவிட்டாராம் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது இது தொடர்பான செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.