”யார் விட்டாலும், நான் விட மாட்டேன்” மு.க.ஸ்டாலின் சபதம்!
dmk
stalin
jayalalitha
aiadmk
By Jon
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து கண்டுபிடிப்பதை யார் விட்டாலும், இந்த ஸ்டாலின் விட மாட்டான் என திமுக தலைவர் ஸ்டாலின் சபதம் எடுத்திருக்கிறார். திருவாரூரில் நேற்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அந்த பிரச்சாரத்தில் பேசுகையில், ஜெயலலிதா இறந்ததற்கு காரணம் என்ன? கருணாநிதியும், ஸ்டாலினும்தான் என, இ.பி.எஸ். கூறியிருக்கிறார்.
ஸ்டாலின் தான் காரணம் என்றால் நான்காண்டு காலம் ஆட்சியில் இருந்த நீங்கள் என்ன செய்தீர்கள்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து கண்டுபிடித்து மக்களுக்கு அடையாளம் காட்டுவது நமது கடமை. இதை யார் விட்டாலும், இந்த ஸ்டாலின் விட மாட்டான் என்று பேசினார்.