அன்று ஜெயலலிதா.. இன்று சசிகலா.. அரசியலில் எடுத்த ஒரே முடிவு.!
சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்திருக்கிறார். பொது எதிரி திமுகவை வீழ்த்துவே ஒரே நோக்கம் அன்று அறிவித்திருக்கிறார். 2021 அரங்கேறும் காட்சிகள் அனைத்தும் 1989-ம் ஆண்டை நினைவுபடுகின்றன. எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்தது.
இந்தத் தேர்தலில் திமுக வென்றது, அதிமுக ஜெயலலிதா வசம் சென்றது. சசிகலா போல் 1989ஆம் ஆண்டு ஜெயலலிதாவும் அரசிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இது குறித்து அப்போது ஜெயலலிதா எழுதிய கடிதத்தில், ”நான் அரசியல் விட்டு விலகுகிறேன். அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த என்னை எம்ஜிஆர் அரசியலில் அறிமுகப்படுத்தினார்.
அவர் மறைந்த உடனேயே அரசியலை விட்டு விலக எண்ணினேன். நேர்மை, நாணயம் ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து வந்த போதிலும் அரசியலில் பல கீழ்த்தரமான இழிச்சொற்களுக்கும் ஆளாக்கப்பட்டு விட்டேன். 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து எனது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முழுவதும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஓய்வெடுத்தேன்.
இதனால் உடல் நலத்தை கருத்தில் கொண்டு நான் அரசியலை விட்டு விலகுகிறேன். இதுவரை எனக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி ” என்று எழுதியிருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் இந்த முடிவு மாறியது. திமுக வெற்றி பெற்றுவிட்டால் அந்த பழி தன் மீது வந்து விடும் என்பதை மனதில் வைத்து சசிகலா அரசியலில் இருந்து விலகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் சசிகலா இல்லாத அமமுகவில் சிலர் கூட்டணி வைக்க முன்வரலாம் என்பதும் கூட அவரது என்ன ஓட்டமாக இருந்திருக்கலாம். மேலும் பாஜகவின் அழுத்தத்தினாலும் சசிகலா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் இது தற்காலிகமானது என்றும் தேர்தலுக்குப் பிறகு சசிகலாவின் முடிவு மாறலாம் எனச் சொல்லப்படுகிறது.