ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை எப்போது முடக்குவீர்கள்? தமிழக அரசுக்கு ம.சுப்ரமணியம் கேள்வி
சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்த சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை ஆகியுள்ளனர். கடந்த 8-ம் தேதி தமிழகம் வந்த சசிகலாவுக்கு அமமுகவினர் பலமான வரவேற்பு அளித்துள்ளனர். இந்நிலையில் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன் என சசிகலா தெரிவித்திருந்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையுடன் விதிக்கப்பட்ட 10 கோடி ரூபாய் அபராதத்தையும் செலுத்திய பிறகே இருவரின் விடுதலை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு திமுகவைச் சேர்ந்த ம.சுப்ரமணியம் எதிர்வினையாற்றியுள்ளார். “இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்களை மட்டும் பறிமுதல் செய்யும் தமிழக அரசு ஏ1 மற்றும் ஏ2 குற்றவாளிகளான ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் சொத்துக்களை ஏன் பறிமுதல் செய்யவில்லை” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.