ஜெயலலிதா நினைவிட திறப்புக்கும்,சசிகலாவின் விடுதலைக்கும் சம்மந்தம் இல்லை - கடம்பூர் ராஜு

sasikala tamilnadu politician
By Jon Jan 29, 2021 04:55 PM GMT
Report

ஜெயலலிதா அவர்களது நினைவிட திறப்பையும் சசிகலாவின் விடுதலையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மன்னர் திருமலை நாயக்கரின் 438 வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜு, செல்லூர் கே.ராஜு உள்ளிட்டோர், மாலை அணிவித்து மரியாதை செய்தனர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே கையகப்படுத்தப்பட்டதாக கூறினார்.

மேலும் இந்த நினைவிடத்தை மக்கள் எளிதாக பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாவும் தெரிவித்துள்ளார்.