ஜெயலலிதா நினைவிடம் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி?
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 செப்டம்பா் 22ம் தேதி திடீா் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர் உடல் நலக்குறைவால் அவா் டிசம்பா் 5, 2016ல் மரணம் அடைந்தாா்.
இம்மண்ணை விட்டு ஜெயலலிதா மறைந்தாலும் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு நினைவாக, பல தடைகளை மீறி ரூ.57.8 கோடி மதிப்பில் சென்னை மெரினா கடற்கரையில் ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இந்த நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். நினைவிடத்தில் உள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் மைய பணிகள் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், திறக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே மூடப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.