ஜெயலலிதா உடனான கலந்துரையாடல்கள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன - மோடி புகழாரம்

people admk dmk bjp
By Jon Mar 01, 2021 02:09 PM GMT
Report

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளான 24-ந்தேதி இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவில், ' ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுகிறேன். அவர் மக்கள் சார்பு கொள்கைகள் மற்றும் நலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்காக பரவலாக போற்றப்படுகிறார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், மற்றும் பெண்களுக்கு அதிகாரமளிக்க குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஜெயலலிதா செலுத்தியுள்ளார். ஜெயலலிதா உடனான கலந்துரையாடல்கள் என்றும் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன" எனப் பதிவிட்டுள்ளார்.