வேதா நினைவு இல்ல சாவியை தமிழக அரசே வைத்துக் கொள்ளலாம்- உயர்நீதிமன்றம் உத்தரவு
வேதா நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவை கிடையாது. அதை அரசே வைத்துக் கொள்ளலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அறிவித்துள்ளது.
வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வர இருந்தபோது, நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை என்றும் அதை அரசே வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
திறப்பு விழா முடிந்ததும் நீதிமன்ற பதிவாளரிடம் சாவியை ஒப்படைக்க உத்தரவிட்ட தனி நீதிபதி ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

தமிழக அரசு மேல்முறையீடு மனுக்கு பதிலளிக்க தீபா, தீபக்கிற்கு நோட்டிஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் வழக்கு விசாரணையை பிப்ரவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அன்றைய தினம் பொதுமக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக திறக்க தடை கிடையாது என்றும், ஆனால், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.