அத்தை வீடு எங்களுக்குதான் அது விற்பனைக்கு இல்லை : ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ

J Jayalalithaa ADMK
By Irumporai Sep 06, 2022 04:52 AM GMT
Report

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போலீஸ் தோட்டத்து வீடு விற்பனைக்கு அல்ல என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அத்தை வீடு எங்களுக்குதான்

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. அவர் மேலும், ஜெயலலிதாவுடன் பழகியவர்கள் எல்லாம் போயஸ் தோட்டத்து வீட்டை உரிமை கொண்டாட முடியாது. சசிகலாவுக்கும் இது பொருந்தும் எனக் கூறினார்.

அத்தை வீடு எங்களுக்குதான் அது விற்பனைக்கு இல்லை : ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ | Jayalalitha House Is Not For Sale Deepa

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஆடியோ பதிவில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போலீஸ் தோற்ற வீடு விற்பனைக்கு இல்லை. இந்த வீடு எனது பாட்டியால் கட்டப்பட்டது. அதன் பின்னர் அவர் என் அத்தை ஜெயலலிதாவிற்கு இந்த வீட்டை கொடுத்து விட்டார்.

யாருக்கும் உரிமை இல்லை

நாங்கள் எங்கள் சிறுவயதில் இந்த வீட்டில் தான் வளர்ந்து இருக்கிறோம் . ஜெயலலிதாவின் போயஸ் வீடு எங்கள் பூர்வீக சொத்து. இதை நாங்களே பராமரித்துக் கொள்வோம். வேறு யாரும் இந்த போயஸ் இல்லத்துக்கு உரிமை கோர முடியாது. எனக்கு என் அத்தை மட்டும் தான் முக்கியம். அவருடன் யார் இருந்தார்கள் யாரெல்லாம் வந்தார் போனார்கள் என்பது பற்றி இது கவலை இல்லை.

அத்தை வீடு எங்களுக்குதான் அது விற்பனைக்கு இல்லை : ஜெ.தீபா பரபரப்பு ஆடியோ | Jayalalitha House Is Not For Sale Deepa

என் அத்தை பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவருக்கு உதவி செய்ய ஆலோசனை சொல்ல ஆயிரக்கணக்கானவர்கள் உடன் இருந்திருப்பார்கள். அதற்காக அவர்கள் எல்லாம் போயஸ் தோட்ட வீட்டை உரிமை கொண்டாட முடியாது.

குடும்ப உறுப்பினரும் ஆக முடியாது . அத்தையுடன் பயணித்ததாக சொல்லும் சசிகலாவுக்கும் இது பொருந்தும். தயவு செய்து ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் விற்பனை என்று வதந்திகளை பரப்ப வேண்டாம்.

இது எங்கள் அமைதியை கெடுக்கிறது தேவையற்ற அழுத்தத்தை எங்களுக்கு கொடுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.