மறைந்த ஜெயலலிதாவிற்கு இந்த நடிகைதான் ரொம்ப பிடிக்குமாம்? தீயாய் பரவும் தகவல் - மெர்சலான ரசிகர்கள்
ஹன்சிகா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் நடிகர்கள் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விஷால், அதர்வா, ஆர்யா, உதயநிதி என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த இவர், குட்டி குஷ்பு என்று பலராலும் கொண்டாடப்பட்டார். ஹன்சிகா என்றால் அவருடைய அடையாளமே அவருடைய உடல் எடைதான் எனக் கூறலாம்.
கொழுகொழுவென பப்ளிமாஸ் போல இருந்த இவர் தற்போது தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து யாரும் எதிர்பார்க்காத அளவில் ஒல்லியாக மாறினார். உடல் எடையை குறைத்த பிறகு சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகை நன்தாரா பாணியில் சொந்தமாக “மகா” என்ற படத்தை தயாரித்து அதில் நடித்துள்ளார்.
இயக்குனர் செல்வமணி
இந்நிலையில் சமீபத்தில் ‘மகா’ படத்தின் ஆடியோ லான்ஞ் நடந்தது. அப்போது, அந்த விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் செல்வமணி பேசினார். அப்போது அவர் பேசுகையில், ஹன்சிகா பற்றிய ஒரு தெரியாத சம்பவத்தை கூறினார்.
தமிழ் சினிமாவின் 100 ஆண்டு நிறைவு விழா ஜெயலலிதா தலைமையில் அவர் முதலமைச்சராக இருக்கும் போது நடந்தது. அப்போது ஜெயலலிதாவை பெருமைப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் ஏழு பாடல்கள் அடங்கிய பாட்டுக்கு யாரையாவது ஆட சொல்லலாம் என நினைத்து ஒரு 5 நடிகைகளின் புகைப்படங்களை கொடுத்து ஜெயலலிதாவிடம் யாரை இந்த பாடலுக்கு ஆட சொல்லவேண்டும் என கேட்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா அவர்கள் ஹன்சிகா பேரை சொல்லி பண்ண சொல்லியிருக்கிறார்.
இதை செல்வமணி அந்த மேடையிலேயே கூறினார். இதைப் பார்த்ததும் ஹன்சிகா அப்படியே ஷாக்காகி இன்பதிர்ச்சி அடைந்தார். ஆனால், இந்த விஷயம் ஹன்சிகாவிற்கே தெரியாது என்று செல்வமணி கூறினார்.