ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்
கோவையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க இருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24ம் தேதி வருகிறது. இதனையடுத்து, கோவை சிறுவாணி சாலையில் உள்ள பேரூர் செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தலில் 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று திருமணம் நடைபெற இருக்கிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணங்களை நடத்தி வைக்க உள்ளனர். திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களையும் வழங்க இருக்கிறார்கள். திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களின் உறவினர்கள், பொதுமக்களுக்கு அறுசுவை விருந்தும் அளிக்கப்பட இருக்கிறது.
ருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.