ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
அங்குள்ள ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இருவரும் சேர்ந்து ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.