துணிந்து நின்ற பெண் ஆளுமை : ஜெயலலிதா பிறந்தநாள் - தமிழிசை புகழாரம்
Smt Tamilisai Soundararajan
BJP
By Irumporai
ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது.அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன் வேல்ஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலித உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் :
[
பணிந்து நின்றுதான் பணிசெய்ய வேண்டும் என்பதில்லை...
துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை மரியாதைக்குரிய முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினமான இன்று அவரது நினைவை போற்றுகிறேன் என பதிவிட்டுள்ளார்.