அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல் : காரணம் என்ன?

ADMK O. Panneerselvam
By Irumporai Jun 16, 2022 08:14 AM GMT
Report

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக பிரச்சனை ஓங்கியுள்ளது. அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக கட்சிக்குள் தற்போதுள்ள சூழலில் ஈபிஎஸ் கை ஓங்கியுள்ளதால் . ஓபிஎஸ் ஓரங்கட்டப்பட்டு விடுவாரோ? என்ற அச்சம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஒற்றை தலமை யாருக்கு 

இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே போஸ்டர்கள் ஒட்டி தங்கள் விருப்பத்தை கூறி வருகின்றனர். இதனிடையே கடந்த 2 நாட்களாக ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவர் வீட்டிலும் தனித்தனியே முக்கிய நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டு வந்தது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல்  : காரணம் என்ன? | Jayakumars Car At The Head Office

இந்த நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர் .முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

ஜெயக்குமார் மீது தாக்குதல் 

இந்த நிலையில் ஆலோசனையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது. எடப்பாடி பழனிசாமி சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் மூத்த நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். பொதுக்குழு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முடிக்கப்பட்டு மூத்த நிர்வாகிகள் புறப்பட்டனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- திட்டமிட்டப்படி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்."ஓ.பன்னீர் செல்வதால் வருவதால் ஆலோசனை கூட்டத்தை முடித்து கொள்ளவில்லை. பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் என ஜெயக்குமார் கூறினார்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல்  : காரணம் என்ன? | Jayakumars Car At The Head Office

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமாரின் கார் மீது ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். அவரது காரை ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயக்குமாரின் கார் மீது தாக்குதல்  : காரணம் என்ன? | Jayakumars Car At The Head Office

அ.தி.மு.க.வை ஜெயக்குமார் அழித்துக் கொண்டிருப்பதாக கட்சி அலுவலகத்தின் வெளியே ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். ஏற்கனவே கோவை செல்வராஜ் பேட்டி குறித்த செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு,தெருவில் போற கண்டவனுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என ஜெயக்குமார் பதில் கூறியது குறிபிடத்தக்கது.  

ஓய்ந்துவிடமாட்டேன்... அதிமுக தொண்டர்களுக்கு சசிகலா வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை!