'' அவர் கோட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு '' : மாநாடு வசனத்தை வைத்து முதலமைச்சரை கிண்டல் செய்த ஜெயக்குமார்

jayakumar mkstalin maanadu
By Irumporai Nov 29, 2021 01:31 PM GMT
Report

கோட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்து போவது ரிப்பீட்டு என மாநாடு சினிமா வசனத்தை வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார்.

சென்னை ராயபுரம், திருவிக நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்பமனுக்கள் வழங்கப்படும் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் : 

மழைநீர் கால்வாய்கள் முழுவதுமாக தூர்வாரப்படாமல் இருப்பதால்  சென்னையில் மழைநீர் தேங்கி உள்ளது ,  மழை வெள்ளத்தை அப்புறப்படுத்தும் ஒரு இடங்களில் ராட்சஷ இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும், முதலமைச்சர்  ஸ்டாலின், கோர்ட்டு போடுவது ரிப்பீட்டு, டீ குடிப்பது ரிப்பீட்டு, நடந்து போவது ரிப்பீட்டு, கோட்டு கழட்டுவது ரிப்பீட்டு என மாநாடு படத்தில் வரும் வசனம்போல முதல்வரை கிண்டலடித்தார்.

மேலும் இந்த ரிப்பீட்டு பணிகளையே முதல்வர் தொடர்ந்து செய்து வருவதாகவும், மக்களுக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை என அவர் தெரிவித்தார்