ராஜேந்திர பாலாஜி என்ன தேச துரோகியா? கொந்தளித்த ஜெயக்குமார்
சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக, தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றாமல் உள்ளது எனக் கூறினார்
மேலும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார். ஆனால் அதற்குள்ளாக அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் போட வேண்டிய அவசியம் என்ன?
தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வரும் ஒரு நபரை பிடித்து, அவர் மூலமாக மீண்டும் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்க வைத்துள்ளனர்.குற்றம் செய்தவர்கள் பலரையும் விட்டுவிட்டு, ராஜேந்திர பாலாஜிக்கு தனிப்படை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?
ராஜேந்திர பாலாஜியை தேச துரோகி போல சித்தரித்து, காழ்ப்புணர்ச்சியுடன் அவர் விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை திமுக நடத்துமா என்பதில் சந்தேகம் உள்ளது எனக் கூறினார்.