நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த முதல்வர் - வெட்கக்கேடு!! ஜெயக்குமார்

Government of Tamil Nadu ADMK D. Jayakumar
By Karthick Jun 02, 2024 05:54 AM GMT
Report

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை விவகாரம் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது.

ஜெயக்குமார் பதிவு 

இது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் பதிவு வருமாறு,

நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தான் இதுவரை முதல்வர் இருந்து வந்தார். இப்போது அவரது உள்துறையில் நடப்பது கூட தெரியாமல் இருப்பது வெட்கக்கேடானது.

jayakumar slams cm stalin in adsp velladurai case

சென்னை உயர்நிதிமன்றம் ஓய்விற்கு ஒரு நாள் முன்னர்‌ துறை ரீதியான பணியிடை நீக்க நடவடிக்கை இருக்க கூடாது என அறிவுறுத்தியும்‌ ஏடிஎஸ்பி வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுத்தது யார்?

அதை மீண்டும் ரத்து செய்தது யார்?

காவல்துறையை கைபொம்மையாக தூக்கி போட்டு‌ விளையாடுவது தான் அரசின் வேலையா? ஆழ்வார்பேட்டையிலேயே இருந்தால் ஆட்சி இப்படி தான் இருக்கும்!

இந்த அரசு ஸ்டாலினுக்கு கீழ் இயங்கவில்லை என்பது தற்போது வெளிச்சமாகியுள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை வழக்கு வீரப்பன் என்கவுண்டர், ரௌடி வீரமணி என 12 ரௌடிகளை என்கவுண்டர் சம்பவங்களில் பிரபலமான குற்ற ஆவண காப்பக ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, கடந்த சில மாதங்களுக்கு முன் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ரௌடிசம் செய்பவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

adsp velladurai

பணியில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில் வியாழக்கிழமை மாலை அவரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக உள்துறைச் செயலகம் தெரிவித்தது.