எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிடுவதா? மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் - ஜெயக்குமார் ஆவேசம்
எம்ஜிஆரை யாருடன் ஒப்பிட முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
ஜெயக்குமார்
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ஏழை, எளிய மக்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து கொண்டவர் எம்ஜிஆர்.
மோடி எம்ஜிஆர்
எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்தாலும் இந்த உலகம் உள்ளவரை எம்ஜிஆர் புகழ் அழியாது. எம்ஜிஆரைப் பொறுத்தவரை யாருடனுமே ஒப்பிட முடியாத தலைவர். சாதி, சமய வேறுபாடு பார்க்காமல் அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர்.
அவரை மோடியுடன் ஒப்பிடலாமா? பாஜக கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான். ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பாஜக இருக்கிறது. சிறுபான்மையினரை ஒரு மாதிரியும், மற்றவர்களை ஒரு மாதிரியும் பாஜக பார்க்கிறது.
எனவே எந்த நிலையிலும் எம்ஜிஆரை மோடியுடன் ஒப்பிட முடியாது. எம்ஜிஆரை அண்ணாமலை மோடியுடன் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்" என பதிலளித்தார்.