கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெயிலில் வாடிய தொண்டர்கள் - பாடலை பாடி உற்சாகப்படுத்திய ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆர்ப்பாட்ட மேடையில் பாடகராக மாறி சக தொண்டர்களையும் தன்னுடம் பாடல் பாட வைத்தார்.
அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை திரு.வி.க.நகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மேடையில் பேசிய டி.ஜெயக்குமார்,
திமுக அரசு ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் மக்களை பழி வாங்க வேண்டும் என்ற வகையிலும், எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் வகையிலும், ஆளும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
ஆட்சிக்கு வந்து 15 மாதங்களில் பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு , மின்சார கட்டண உயர்வு என்று பல பரிசுகளை மக்களுக்கு அளித்துள்ளது.
இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கற்பழிப்பு, கட்ட பஞ்சாயத்து அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.
ஜெயக்குமார் விமர்சனம்
அதிமுக ஆட்சியின் போது நிதி நெருக்கடி ஏற்பட்ட போதும் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று பேசிக் கொண்டிருந்த போது கோவிலில் மணி ஒழிக்கவே தனது பேச்சை சிறிது நேரம் நிறுத்தினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், நல்ல சகுணம் திமுக ஆட்சி வீட்டுக்கு செல்ல போகுது என்றார்.

மீண்டும் மறுபடியும் கோவிலில் மந்திரம் ஒலிக்கவே தனது பேச்சை நிறுதி விட்டு அமைதியாக நின்றார்.இதை தொடர்ந்து தனது பேச்சை தொடர்ந்தார்.
சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் கை கழுவி துவங்கி வைத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என விமர்சனம் செய்தார்.பின்னர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்.
பின்னர் மலைக்கள்ளன் திரைப்படத்தின் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... என்ற பாடலை பாடி வெயிலில் வாடிய தொண்டர்களை உற்சாகமடைய வைத்தார்.