விஜய் எங்கள் கூட்டணிக்கு வராவிட்டால்... ஜெயக்குமார் கொடுத்த பதில்

Vijay ADMK D. Jayakumar Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Mar 16, 2026 02:34 PM GMT
Report

எங்கள் கூட்டணிக்கு விஜய் வராவிட்டால் அவர் loser என ஜெயக்குமார் கூறியுள்ளார்.

விஜய்

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.

ஆட்சியில் பங்கு என அறிவித்தும் தவெக தலைவர் விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்று எந்த கட்சியும் கூட்டணியில் இணையவில்லை. 

விஜய் எங்கள் கூட்டணிக்கு வராவிட்டால்... ஜெயக்குமார் கொடுத்த பதில் | Jayakumar Says If Vijay Join Admk Alliance Gainer

இதனால் தவெக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் விஜய் முதல்வர் வேட்பாளர் மட்டுமே, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்று வரும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என தவெக நிர்வாகி செங்கோட்டையன் அறிவித்தார். 

அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் கிடைக்குமா?

அதிமுகவில் காளியம்மாளுக்கு சீட் கிடைக்குமா?

ஜெயக்குமார் பதில்

இந்நிலையில் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து பதிலளித்த அவர், தவெக உடன் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பலமுறை விளக்கமளித்து விட்டார். 

விஜய் எங்கள் கூட்டணிக்கு வராவிட்டால்... ஜெயக்குமார் கொடுத்த பதில் | Jayakumar Says If Vijay Join Admk Alliance Gainer

ஆனால், ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். அதிமுக தலைமையிலான எங்கள் கூட்டணிக்கு வந்தால் விஜய் ஒரு வெற்றியாளராக இருப்பார். இல்லையென்றால் அவர் Loser. வெற்றியாளரா இல்லையா என்பதை விஜய்யே முடிவு செய்து கொள்ளட்டும்" என பேசியுள்ளார்.

இந்நிலையில், 2ஆம் கட்ட வேட்பாளர் நேர்காணல், புதுச்சேரி வேட்பாளர் பட்டியல், தேர்தல் பரப்புரை உள்ளிட்டவை குறித்து தவெக தலைவர் விஜய், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.