ஓபிஎஸ் எங்க போனாலும் அதை பற்றி கவலையில்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ADMK O. Panneerselvam D. Jayakumar
By Irumporai Jan 22, 2023 11:29 AM GMT
Report

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இன்று காலை குஜராத் மாநிலம் சென்றிருக்கும் நிலையில் ஓபிஎஸ் குஜராத் மட்டுமல்ல பீகார் ஒடிசா என எந்த மாநிலம் சென்றாலும் எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக  சந்திப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக பல்வேறு கட்சித் தலைவர்களை அதிமுகவின் பிரபலங்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் டாக்டர் தேவநாதன் யாதவ் அவர்களை அதிமுக தலைவர்கள் சந்தித்தனர்.

இன்று சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் குஜராத் மட்டுமல்ல பீகார் ஒடிசா என எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் செல்லட்டும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார்.

ஓபிஎஸ் எங்க போனாலும் அதை பற்றி கவலையில்லை : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் | Jayakumar Says About Ops

திமுகவின் பி டீம்

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றும் நாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும் ஓபிஎஸ் தங்களை அதிமுக என்று கூறிக்கொள்ள முடியாது என்றும் சட்ட ரீதியாக அது தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   

 திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார் என்றும் ஓபிஎஸ் வேட்பாளரை நிறுத்தினால் அவரை ஒரு சுயேச்சை வேட்பாளராக தான் மக்கள் கருதுவார்கள் என்றும் அவர் கூறினார்.