திமுகவின் 'பி' டீமாக ஓபிஎஸ் உள்ளார் : ஜெயக்குமார் பதிலடி

ADMK D. Jayakumar
By Irumporai Dec 22, 2022 09:16 AM GMT
Report

நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்? வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தனிக்கட்சி தொடங்குங்கள்

இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிவாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

திமுகவின்

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை கடுமையாம விமர்சித்தார். அதுமட்டுமின்றி தைரியம் இருந்தால் தனிக்கட்சி தொடங்குங்கள் என சவால் விடுத்தார்.  

ஓபிஎஸ் பீ டீம்

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது , நாங்கள் ஏன் தனிக்கட்சி தொடங்க வேண்டும்?. வேண்டுமென்றால் ஓபிஎஸ் முன்னேற்ற கழகம் என்று அவர் கட்சி தொடங்கட்டும்.

ஓ.பன்னீர்செல்வம் நடத்தியது கட்சி கூட்டமே இல்லை. பண்ரூட்டி ராமச்சந்திரன் பண்பாக பேசக்கூடியவர். அவர் ஏன் ஒருமையில் பேசினார் என தெரியவில்லை. திமுகவின் 'பி' டீமாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.