இவங்க பண்றது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருக்கு : கொந்தளித்த ஜெயக்குமார்

ADMK D. Jayakumar
By Irumporai Mar 16, 2023 11:00 AM GMT
Report

எடப்பாடி பழனிச்சாமியின் உருவபொம்மையினை எரித்தவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா ? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொந்தளித்துள்ளார் .

 ஜெயக்குமார் கண்டணம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் ஈரோடு கிழக்கு தேர்தல் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது நீட்டை ஒழிக்கும் தெரியும் ரகசியம் தெரியும் என்றார் அமைச்சர் உதயநிதி ,22 மாதங்களுக்கு பிறகும் ரகசியம் சொல்லாமல் மக்களை ஏமாற்றுகின்றனர்.

  எரியும் நெருப்பில் எண்ணெய்

திமுக எம்பிக்கே இங்கு பாதுகாப்பில்லை மக்களிக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என கேள்விஎழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார்.எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை எரித்ததால் நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா?.

பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது. பாஜகவின் செயல் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது என பாஜகவுக்கு ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்