சர்வதேச புலிகள் தினம்; புலியின் வாலை பிடித்த படி போஸ் கொடுக்கும் ஜெயக்குமார்..!
அதிமுகவின் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் புலியின் வாலை பிடித்தப்படி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சர்வதேச புலிகள் தினம்
இன்று சர்வதேச புலிகள் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் 1059 புலிகள் உயிரிழந்துள்ளன.
இதில் பெரும்பாலும் மத்தியப்பிரதேசத்தில் தான் அதிகமாக புலிகள் உயிரிழந்துள்ளன. தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2022 ஆம் ஆண்டில் இதுவரை 75 புலிகள் உயிரிழந்துள்ளன.
கடந்த 10 ஆண்டுகளிலேயே கடநத ஆண்டு தான் 127 புலிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் 106 புலிகளும், 2019 ஆண்டில் 96 புலிகளும், 2017 ஆம் ஆண்டு 117 புலிகளும்,
2016 ஆம் ஆண்டில் 121 புலிகளும், 2015 ஆம் ஆண்டில் 82 புலிகளும், 2014 ஆம் ஆண்டில் 78 புலிகளும், 2013 ஆம் ஆண்டு 68 புலிகளும், 2012 ஆம் ஆண்டு 88 புலிகளும் உயிரிழந்துள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 6 புலிகள் காப்பகங்கள் உள்ளன.இங்கு கடந்த 10 ஆண்டுகளில் 270 புலிகள் உயிரிழந்துள்ளன.
புலியுடன் முன்னாள் அமைச்சர்
இந்த நிலையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். இவர் அதிமுகவின் முன்னாள் அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைப்பிடிக்கும் நிலையில்,
ஜெயக்குமார் புலி ஒன்றுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.அதில் ஜெயக்குமார் புலியின் வாலை பிடித்தப்படியும், புலியின் மீது சாய்ந்த படியும் போஸ் கொடுத்துள்ளார்.