ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல் : கொந்தளித்த செல்வராஜ்

ADMK
By Irumporai Aug 01, 2022 09:38 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் செயல் ஒரு கேவலமான செயல் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். 

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டை இணைக்கும் பணி தொடர்பாக தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.

கோவை செல்வராஜ்

அப்போது ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் கலந்து கொண்டார். இபிஎஸ் தரப்பில், பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல் : கொந்தளித்த  செல்வராஜ் | Jayakumar Kovai Selvaraj Admk Tamil Nadu

அப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் அருகருகே அமர்ந்திருந்த நிலையில், கோவை செல்வராஜ் பக்கம் இருந்த அதிமுக பெயர் பலகையை தங்கள் பக்கம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எடுத்து வைத்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலான நிலையில் இது குறித்து கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.

அதில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்தில் அவர் பெயரில் தான் கட்சி உள்ளது என குறிப்பிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எப்ப வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் பேசி கொண்டிருப்பார்.

ஜெயக்குமர் செய்தது கேவலமான செயல்

தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி பெயர் இணை ஒருங்கிணைப்பாளர் என்பதை தவிர்த்து வேறு எங்கு இருக்கிறது என சொல்ல சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினார். தரமில்லாத செயல்பாடுகளை செய்பவர்களை தரமான மனிதர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள்.

ஜெயக்குமார் செய்தது கேவலமான செயல் : கொந்தளித்த  செல்வராஜ் | Jayakumar Kovai Selvaraj Admk Tamil Nadu

ஆணைய கூட்டத்தில் அதிமுக பெயர் பலகையை தன் பக்கம் நகர்த்தி வைத்துக்கொண்ட ஜெயக்குமாரின் செயல் ஒரு கேவலமான செயல். அமைச்சர், எம்எல்வாக இருந்த அவருக்கு இது கேவலமாக இல்லையா என்றும் அவர் முதல் அதிமுகவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும், ஓபிஎஸ் அனுப்புற ஒரு ஆள் வந்தாலே போதும், அந்த மாதிரி டப்பா பசங்கயெல்லாத்தையும் அடக்கிருவோம் என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கோவை செல்வராஜ் பதிலளித்தார்.