சாலையில் அடிப்பட்டு கிடந்த மூதாட்டி - வேட்டிய மடிச்சு கட்டி களத்தில் இறங்கிய ஜெயக்குமார்
சாலையில் அடிப்பட்டு உதவிக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவருக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தானே முன்வந்து உதவிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக ஆட்சி காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்து வந்தவர் ஜெயக்குமார். பல துறை அமைச்சராக பதவி வகித்த ஜெயக்குமார், சென்னை அதிமுகவின் முக்கிய நபராகவே வளம் வருகிறார். தற்போது எதிர்க்கட்சியாக அதிமுக இருக்கும் சூழலில், தொடர்ந்து திமுகவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து வருகிறார் ஜெயக்குமார்.
மூதாட்டிக்கு உதவி
அண்மையில், சென்னை செங்குன்றத்தில் மூதாட்டி ஒருவர், சாலை விபத்தின் அடிப்பட்டு உதவிக்காக பரிதவித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெயக்குமார், உடனே தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, மூதாட்டிக்கு உதவ முன்வந்தார்.
அருகில் இருந்தவர்களின் உதவியோடு, தானே வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு மூதாட்டியை தூக்கி ஆட்டோவில் அமர்த்தினார். மேலும் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அவர், ஆட்டோக்காரரிடம் தானே கொஞ்சம் பணத்தையும் கையில் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.