துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் இனி வரலாற்றில் இடம் பெறாது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

dmk duraimurugan jaykumar
By Irumporai Oct 01, 2021 09:36 AM GMT
Report

அமைச்சர் துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது. என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை அடையாறில் உள்ள சிவாஜி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

அ்போது  செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்:

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் அமைத்து, பிறந்தநாள் விழாவை அரசு விளைவாக அறிவித்து, அவரது புகழுக்கு புகழ் சேர்த்தது அதிமுக அரசுதான் எனக் கூறினார்.

மேலும், கடந்த 28-ந்தேதி திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என்று கூறியுள்ளார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மீதான அமைச்சர் துரைமுருகனின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அவர், திமுக கட்சியே துரோக கும்பல்தான் எனக் கூறினார்.அமைச்சர் துரைமுருகனின் அண்ட புழுகெல்லாம் வரலாற்றில் இடம் பெறாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.