‘’அன்வர் ராஜாவை நீக்கியது சரிதான் அப்பதான் மற்றவர்கள் திருந்துவார்கள்” - ஜெயக்குமார் தடாலடி
அன்வர் ராஜாவை நீக்கியது சரியான நடவடிக்கையே என அதிமுகவின் முன்னாள் அமைச்சரான டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்
அதிமுக செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் , அன்வர் ராஜாவை நீக்கியது சரி தான். அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கழகம் என்பது ஒரு மாபெரும் இயக்கம். ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கின்ற ஒரு இயக்கம்.
எனவே கழகத்திலிருந்து கொண்டு கழகத்தை விமர்சனம் செய்வது, கழக கூட்டங்களிலே அதாவது அறைக்கு உள்ளே நடக்கும் விஷயங்களை எல்லாம் தெரிவிப்பது நல்லதல்ல. எனவே அன்வர்ராஜா மீது எடுத்த நடவடிக்கை என்பது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. இல்லையென்றால் ஆள் ஆளுக்கு விமர்சனம் செய்வார்கள்.
எங்களுக்கு 66 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். 75 உறுப்பினர்கள் கூட்டணிக் கட்சியோடு சேர்த்து 75 உறுப்பினர்களை பெற்றுள்ளோம். 1 கோடியே 46 லட்சம் வாக்குகளை பெற்றுள்ளோம். எங்களுக்கும் திமுகவுக்கும் 10 லட்சம்தான் ஓட்டு வித்தியாசம். திமுகவுக்கும் எங்களுக்கும் 3 சதவீதம்தான் வித்தியாசம் என கூறினார்.
மேலும், தற்போது அனைவரும் ஒற்றுமையோடு இருக்கும்போது ஒருசிலர் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டால் கட்சி எப்படி அதனை வேடிக்கை பார்க்கும்.எனவே கட்சி இதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எடுத்துள்ளது.
அதிகாரம் பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு அந்த அதிகாரத்தின்படிதான் கட்சி வழிநடத்தப்படுகிறது. எப்போதும் பொதுக்குழுதான் அதிகாரம்.
ஆனால் அடிப்படை விதியாக இருக்கின்ற அடிமட்ட உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் விதி என்பது எந்த விதத்திலும் மாற்றம் இல்லை.அது முழுமையாக இருக்கும். அடிப்படை உறுப்பினர்களை நேடியாக தேர்வு செய்யும் விதி என்பது எந்தவிதத்திலும் மாற்றம் இல்லை.
5 ஆண்டுக்காலம் தொடர்ந்து கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். 5 ஆண்டு மற்றும் 5 ஆண்டுக்கு மேல் உள்ளவர்கள்தான் வாக்களிக்கத் தகுதியானவர்கள் என முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.