அக்கறையுடன் இல்ல - பிரதமரை போகிற போக்கில் சந்திக்கிறார் முதல்வர் - ஜெயக்குமார் விமர்சனம்..!!

M K Stalin Tamil nadu ADMK AIADMK D. Jayakumar
By Karthick Dec 19, 2023 04:27 AM GMT
Report

சென்னையில் நடைபெற்ற இயேசு அழைக்கிறார் வளாகத்தில், அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கிறிஸ்துமஸ் பெருவிழா

அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

jayakumar-accused-govt-for-not-taking-enough-steps

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, வானிலை ஆய்வு மையம் தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவித்தும், கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகுகள் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கூறி, அவற்றையெல்லாம் செய்ய அரசு தவறிவிட்டதாக விமர்சனம் செய்தார்.

போகிற போக்கில்..

சென்னை மழையில் இருந்து அரசு பாடம் கற்க தவறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஜெயக்குமாரிடம், முதல்வர் முக ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது.

வேகத்துடன் - ஒருங்கிணைப்புடன் வெல்ல வேண்டும் - அதிகரிகளுடனான ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின்

வேகத்துடன் - ஒருங்கிணைப்புடன் வெல்ல வேண்டும் - அதிகரிகளுடனான ஆலோசனையில் முதல்வர் முக ஸ்டாலின்

அதற்கு பதிலளித்த அவர், மக்கள் மீது அக்கறை கொண்டு முதல்வர் டெல்லி செல்லவில்லை என்று தெரிவித்து, இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு செல்லும் வேளையில் போகிற போக்கில் பிரதமரை சந்திக்கிறார் என்று குற்றம்சாட்டினார்.

jayakumar-accused-govt-for-not-taking-enough-steps

தொடர்ந்து அவரிடம் ஓ.பி.எஸ் அணி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு கேட்கப்பட்ட நிலையில், தொண்டர்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்டவர் ஓ.பி.எஸ் என்று கூறி, அவரை தாங்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றார்.