லியோ: ரெட் ஜெயண்ட்டுக்கு படத்தை கொடுக்காவிட்டால் பிரச்சனை கொடுப்பார்கள் - ஜெயக்குமார் பேட்டி!
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
ஜெயக்குமார்
முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது "தமிழகத்தில் ஆட்சியா நடக்கிறது இப்போது? இணைக்கு ஆட்சி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.
ஆளுங்கட்சி சார்ந்தவர்களுக்கும், பொதுமக்களுக்கும், பத்திரிகை துறைக்கும் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு பொம்மை அரசாங்கம் இந்த தமிழ்நாட்டை ஆள்கிறது என்றால், அது விடியா திமுக அரசுதான் என்று ஜெயக்குமார் பேசியுள்ளார்.
பேட்டி
மேலும் அவரிடம் லியோ திரைப்பட வெளியீட்டு விவகாரம் குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது "எங்கள் ஆட்சிக்காலத்தில் திரைத்துறை சுதந்திரமாக செயல்பட்டது. அன்றைக்கு நடிகர் விஜய் எடப்பாடியாரை சந்தித்தார், அவரின் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
ரெட் ஜெயண்ட் மூவீஸுக்கு திரைப்படத்தை கொடுக்காவிட்டால் தொல்லைகளையும், பிரச்சனைகளையும் கொடுக்கும் வகையில் தான் இந்த விடியா திமுக அரசு செயலாற்றி வருகிறது" என்று ஜெயக்குமார் பேசியுள்ளார். மேலும்,