இந்தியக் கொடியை நிராகரித்த அமித்ஷா மகன் ஜெய்ஷா... - வைரலாகும் வீடியோ...!

Cricket Viral Video
By Nandhini Aug 29, 2022 06:58 AM GMT
Report

நேற்று பாகிஸ்தானை தோற்கடித்த இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடும்போது, இந்தியக் கொடியை வாங்க மறுத்த ஜெய்ஷாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

துபாயில் 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்டுள்ளன. ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை அணியை வீழ்த்தியது.

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

இதனையடுத்து, நேற்று 2வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய 19.4 ஓவர் முடிவில் 5 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.  

Jay Shah - viral video

ஜெய்ஷா நிராகரிப்பு

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணியின் வெற்றியை கொண்டாடும்போது, அருகில் இருந்தவர் கொடுத்த தேசிய கொடியை வாங்க மறுத்துள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா.