மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ஜெய் ஷா - வைரலாகும் வீடியோ...!

Cricket India
By Nandhini Jan 04, 2023 08:41 AM GMT
Report

கலோலில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்த ஜெய் ஷாவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய் ஷாவுக்கு மெஸ்ஸி கொடுத்த பரிசு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஆவார்.

சமீபத்தில் நட்சத்திர கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி தனது ஃபிஃபா வெற்றிக்குப் பிறகு அவருக்கு எதிர்பாராத பரிசை வழங்கினார். பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜெய் ஷாவிற்கு, அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணியின் 10-வது எண் கொண்ட T.Shirtடை பெற்றார்.

அதில் அந்த நாட்டின் கேப்டன் லயோனல் மெஸ்ஸி கையெழுத்திட்டார். அதில், ஜெய் ஷா (ஜெய் ஷாவுக்காக) என்ற வாசகங்கள் மெஸ்ஸியால் எழுதப்பட்டு, அதில் அவருடைய கையெழுத்தும் இருந்தது. இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியமடைய வைத்தது.

jay-shah-new-cricket-ground-kalol

கிரிக்கெட் விளையாடிய ஜெய் ஷா -

இந்நிலையில், இன்று காந்திநகரில் உள்ள கலோலில் புதிய கிரிக்கெட் மைதானத்தை ஜெய் ஷா திறந்து வைத்தார். அப்போது, புதிய மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.