பாலிவுட்டில் சம்பவம் செய்தாரா அட்லீ...? ஜவான் படத்தின் ட்விட்டர் Review

Nayanthara Anirudh Ravichander Shah Rukh Khan Atlee Kumar Jawan
By Karthick Sep 07, 2023 04:18 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ள இயக்குனர் அட்லீ, நயன்தாரா, அனிருத் ஆகிய மூவரும் ஷாருக் கானுடன் இணைந்துள்ள படம்"ஜவான்".

ஜவான்

ஜவான் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜவான்.இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே நடித்துள்ளனர். இசையமைப்பாளராக பாலிவுட்டில் இப்படம் மூலம் அனிருத் அறிமுகமாகிறார்.

jawan-twitter-review

கோலிவுட்டில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த அட்லீ, பாலிவுட்டில் அறிமுகமாகும் நிலையில், இந்த படத்தின் மீது தமிழக திரை ரசிகர்களிடமும் நல்ல எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அதனை அதிகரிக்கும் வகையில் சில நாட்கள் முன்பு சென்னையில் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடைபெற அதில் ஷாருக் கானும் கலந்து கொண்டார்.மசாலா படங்களை இயக்குவதில் கை தேர்ந்த அட்லீ இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் முத்திரை பதித்தாரா? என்பதை ரசிகர்களின் ட்விட்டர் review என்ன சொல்கிறது என தற்போது காணலாம்.