ஸ்காட்லாந்து அணியை மிரட்டி எடுத்த பும்ரா..சாதனை பட்டியலில் இடம் பிடிப்பு

Record T20 Jasprit Bumrah World Cup
By Thahir Nov 06, 2021 09:55 AM GMT
Report

ஸ்காட்லாந்து அணிக்கெதிரான போட்டியை இந்தியா மிக எளிதாக வெற்றி பெற்றது.

நேற்று ஸ்காட்லாந்து அணியை இந்தியா 7 ஓவர்களில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் உயர்ந்துள்ளது.

இதனால் ஆப்கானிஸ்தானுக்கு முன்னால் நாம் உள்ளோம். இந்நிலையில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது.

அது என்னவென்றால் ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையே 7 ஆம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கான் அணி வெற்றி பெற வேண்டும்.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பூம்ரா ஒரு சாதனையை படைத்துள்ளார்.

நேற்று 2 விக்கெட்களை வீழ்த்திய பூம்ரா மொத்தமாக டி 20 போட்டிகளில் 64 விக்கெட்களை வீழ்த்தி இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் சஹால் 63 விக்கெட்களோடு இருக்கிறார்.