முடிஞ்சா தொட்டு பாரு.. இங்கிலாந்து வீரரை மிரளவைத்த ஜஸ்ப்ரிட் பும்ராஹ்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக பந்துவீசியது.
இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறிய இங்கிலாந்து அணி 71 ஓவர்கள் முடிவில் 149 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்துவிட்டு தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியது.
நேற்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே ஜஸ்ப்ரிட் பும்ராஹ் மிக சிறப்பாக பந்துவீசி வருகிறார். கடந்த இன்னிங்ஸில் 80 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்து அணிக்கு வலு சேர்த்த ஓலி போப்ப்பை, இந்த இன்னிங்ஸில் வெறும் 2 ரன்னில் போல்டாக்கி தனது விக்கெட்டையை துவங்கிய பும்ராஹ், இங்கிலாந்து அணியின் மற்றொரு முக்கிய வீரரான பாரிஸ்டோவையும் அசால்டாக போல்டாக்கி அசத்தினார்.
ஜடேஜா மற்றும் ஷர்துல் தாகூரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து வருவதன் மூலம், போட்டியின் 84 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ள இங்கிலாந்து அணி, தோல்வியை தழுவியது.