டி20 உலகக்கோப்பை போட்டி - பும்ராவுக்கு பதில் யார்? - விளக்கம் கொடுத்த ராகுல் டிராவிட்

Jasprit Bumrah Rahul Dravid Indian Cricket Team
By Nandhini Oct 05, 2022 12:46 PM GMT
Report

டி20 உலகக்கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு யார் இடம்பெறபோகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் கொடுத்துள்ளார். 

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ள உள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட இருக்கிறது.

பும்ரா விலகல்

பிசிசிஐ தன் டுவிட்டர் பக்கத்தில், பும்ராவிற்கு மீண்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகியுள்ளதாக பிசிசிஐ நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

jasprit-bumrah-rahul-dravid

முகமது ஷமி இடம் பெறுவாரா?

இந்நிலையில், 20 ஓவர் உலகக்கோப்பையில் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி இடம் பெறுவாரா? என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது, இது குறித்து டிராவிட் கூறுகையில்,

பும்ராவுக்கு பதிலாக யார் இடம் பெறுவார் என்பதை ஆலோசித்து வருகிறோம். அக்டோபர் 15ம் தேதி வரை எங்களுக்கு நேரம் இருக்கிறது.

முகமது ஷமி மாற்று வீரர்கள் பட்டியலில் இருக்கிறார். கொரோனா பாதிப்பு காரணமாக தென்னாப்பிரிக்கா தொடரில் அவர் ஆடவில்லை. அவர் தற்போது தேசிய கிரிக்கெட் அகடாமியின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அவர் எப்படி குணமடைந்து வருகிறார் என்பது அறிக்கை மூலம் தான் தெரியவரும். கொரோனா பாதிப்பு 15 நாட்களுக்கு பிறகு அறிக்கை கிடைக்கும்.

நாங்கள் ஒரு அழைப்பை விடுப்போம். அவருடைய அறிக்கை கிடைத்தவுடன் எதை எவ்வாறு முன்னெடுத்து செல்வது பற்றி ஆலோசிப்போம் என்றார்.