இவரை கேப்டனாக கொண்டு வந்தால் இந்திய அணிக்கு நல்லது - அக்தர் கருத்தால் பரபரப்பு

By Petchi Avudaiappan Jan 26, 2022 09:42 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணிக்கு சிறப்பான எதிர்காலம் அமைய குறிப்பிட்ட இளம் வீரர் ஒருவரை கேப்டனாக தேர்வு செய்ய வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார்.

மூன்றுவித போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்த பிறகு, டி20 மற்றும் ஒருநாள் அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இவரை கேப்டனாக கொண்டு வந்தால் இந்திய அணிக்கு நல்லது - அக்தர் கருத்தால் பரபரப்பு | Jasprit Bumrah Must Be Considered For Captaincy

  ஆனால்  டெஸ்ட் போட்டிகளுக்கு யார் அடுத்த கேப்டனாக வரவேண்டும் என்ற கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன.

கே.எல்.ராகுல் தனது கேப்டன் பொறுப்பில் இன்னும் போதிய அனுபவம் பெறவில்லை. 2 ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக இருந்தாலும், இந்திய அணியில் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை.

எனவே ஒரு பேட்ஸ்மேனை கேப்டனாக கொண்டு வருவதைவிட, வேகப்பந்து வீச்சாளரை கேப்டனாக கொண்டுவந்தால் அணியில் ஆக்ரோஷம் இன்னும் அதிகமாக இருக்கும். உதாரணமாக, இந்திய அணியில் கபில்தேவ் கேப்டன் பொறுப்பில் இருந்தபோது ஆக்ரோஷம் அணியில் நிலவியது என நன்கு அறிவோம் என சோயப் அக்தர் கருத்து தெரிவித்துள்ளார். 


மேலும் பாகிஸ்தான் அணியிலும் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் இம்ரான்கான் ஆகியோரும் தலை சிறந்த கேப்டனாக இருந்துள்ளனர். அவர்களும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான்.

ஆகையால் இளம் வீரராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக நியமித்தால் டெஸ்ட் போட்டிகளில் இன்னும் ஆக்ரோஷம் நிலவும். நிச்சயம் வெற்றியை நோக்கியும் எடுத்துச் செல்வார். 

ஜஸ்பிரித் பும்ரா அடுத்த கேப்டனாக வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும். அவருக்கு தற்காலிகமாக துணை கேப்டன் பொறுப்பு கொடுத்து இன்னும் பொறுப்புடன் விளையாட வைக்க வேண்டும் எனவும் அக்தர் யோசனை கூறியுள்ளார்.