அவசர அவசரமாக நியூசிலாந்துக்கு பறக்கும் பும்ரா.... - வெளியான தகவல்... - ஷாக்கான ரசிகர்கள்...!
அறுவைசிகிச்சை செய்வதற்காக அவசர அவசரமாக நியூசிலாந்துக்கு பும்ரா பறக்கப்போவதாக வெளியான தகவலால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
பும்ரா விலகல்
காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகினார். இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வந்தது. களமிறங்கப்போகும் ஜஸ்ப்ரித் பும்ரா நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்ப்ரித் பும்ரா, ஐ.பி.எல். தொடரில் நேரடியாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியானது. வெளியான இந்த தகவலால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.
நியூசிலாந்துக்கு பறக்கும் பும்ரா
இந்நிலையில், பும்ராவை நியூசிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பும்ராவுக்கு ஏற்பட்டு பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம்.
இதனையடுத்து, அவர் குணமடைய நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்று கருதிய பும்ரா அதனை தவிர்த்து வந்திருக்கிறார். இருந்தாலும், தற்போது வேறு வழியே இல்லை என்ற வகையில் அவர் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். இந்த அறுவை சிகிச்சையை நியூசிலாந்தை சேர்ந்த ரோவன் ஸ்கௌடன் என்ற மருத்துவர் செய்ய இருக்கிறார்.
ரசிகர்கள் ஷாக்
அறுவை சிகிச்சை முடிந்து பும்ரா பழையபடி திரும்ப 24 - 25 வாரங்களாகுமாம். அதாவது செப்டம்பர் மாதம் வரை பும்ராவால் விளையாட முடியாது. இதனால், ஐபிஎல் தொடர் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடமாட்டார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
இனி நேராக உலகக்கோப்பையில் தான் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் பும்ரா விளையாடுவார் என்று அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த தகவல் ரசிகர்களுக்கு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.