நான் சந்தித்த அபாயகரமான பந்து வீச்சாளர் பும்ராதான் - பட்டென கூறிய ஜோஸ் பட்லர்…!
நான் சந்தித்த அபாயகரமான பந்து வீச்சாளர் பும்ராதான் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. இந்த 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 2-வது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
பும்ரா விலகல்
காயம் காரணமாக டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா விலகினார். இத்தகவலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அபாயகரமான பந்து வீச்சாளர் பும்ரா
இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் சமூகவலைத்தளம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்தார். அப்போது, அவரிடம் பல கேள்விகளை ரசிகர்கள் கேட்டனர்.
அப்போது, 20 ஓவர் கிரிக்கெட்டில் நீங்கள் இதுவரை எதிர்கொண்ட பவுலர்களில் ஆக்ரோஷமான, அபாயகரமான பவுலர் யார் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பட்லர், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராதான் என்றார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.