கேப்டன் பதவிக்கு பும்ரா சரிப்பட்டு வரமாட்டார் - ரவிசாஸ்திரி விளக்கம்
இந்திய அணியின் கேப்டனாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் இருப்பது மிகவும் கடினம் என்று இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
மூன்றுவித போட்டிகளில் இருந்தும் தனது கேப்டன் பொறுப்பை விராட் கோலி ராஜினாமா செய்த பிறகு, குறிப்பாக டெஸ்ட் போட்டிகளுக்கு யார் அடுத்த கேப்டனாக வரவேண்டும் என்ற கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகின்றன.
ரோஹித் சர்மாவிற்கு ஏற்கனவே லிமிடெட் ஓவர் போட்டிகளில் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு விட்டதால் கூடுதலாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பு கொடுத்தால் வேலைப்பளு அதிகமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அதில் அவர் பேசியதாவது, ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணியின் கேப்டனாக இருப்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை, ஒரு வேகப்பந்து வீச்சாளர் கேப்டனாக இருக்க வேண்டும் என்றால் அவருக்கு ஆல்ரவுண்டர் திறமையும் இருக்க வேண்டும்,
பந்துவீச்சாளராக இருந்தாலும் மைதானத்தில் எப்பொழுதும் ஆக்ரோஷமாகவே இருக்க வேண்டும் இதனால் ஒரு வேகப்பந்து வீச்சாளர் அணியை வழிநடத்துவது என்பது மிகவும் கடினம்.
கபில்தேவ், இம்ரான் போன்று ஒரு ஆல்ரவுண்டராக இருந்தால் அணியை வழி நடத்தலாம் என்று ரவி சாஸ்திரி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.