ஸ்டெம்பை தெறிக்கவிட்ட பும்ராஹ் - மிரண்டு போன பேட்ஸ்மேன்..!
ஆப்ரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி தென் ஆப்ரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு துவங்கியது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 327 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 123 ரன்களும், மாயன் அகர்வால் 60 ரன்களும் எடுத்தனர். இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள்,
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 197 ரன்களுக்கே தென் ஆப்ரிக்கா அணி ஆல் அவுட்டானது.