'நீட்' தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் எப்படி பார்க்கலாம்?

NEET நீட்
By Petchi Avudaiappan Nov 01, 2021 11:25 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி  இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வெழுதினர்.

அதில் மகாராஷ்டிராவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் இரண்டு மாணவர்களின் வினாத்தாள்களின் ஓ.எம்.ஆர். தாள்கள் மாறியுள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளை வெளியிட மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் நீட் முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகள் குறித்த கூடுதல் தகவல்கள் நீட் தேர்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.