வேதனையை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரிட் பும்ரா... என்ன தான் நடந்தது?
கொரோன விதிமுறை காரணமாக கடந்த பல மாதங்களாக ஓய்வின்றி விளையாடி வருவது மனதளவில் சோர்வை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய அணி வீரர் பும்ரா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் தோல்வியடைந்து கிட்டதட்ட தொடரை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த தோல்விகள் ஒட்டுமொத்த இந்திய அணி ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த பல மாதங்களாக ஓய்வின்றி தொடர்ந்து விளையாடி வருவது மனதளவில் சோர்வை கொடுத்துள்ளதாக இந்திய அணியின் பும்ரா தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் ஓய்வு தேவைப்படும். அது மிகவும் முக்கியமானதும் கூட. ஆனால் இவையெல்லாம் ஆட்டம் நடக்கும்போது எங்களுக்கு தோன்றுவதில்லை. ஆனால் பல மாதங்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருப்பது மனதளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் உண்மைதான்.
பிசிசிஐ தங்களால் முடிந்த அளவுக்கு எங்களை வசதியாக வைத்திருக்க முயற்சி எடுக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் மனச்சோர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் பும்ரா கூறியுள்ளார்.