ஆண்டர்சனை விட இவர்தான் சிறந்த பந்து வீச்சாளர் – பாராட்டித் தள்ளும் முன்னாள் இங்கிலாந்து வீரர்
இந்தியா- இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் யார் சிறந்த பந்து வீச்சாளர் என்ற கேள்விக்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் டேவிட் கோவர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகளில் மட்டும் நடைபெற்ற நிலையில், 5வது டெஸ்ட் போட்டி வீரர்களின் பாதுகாப்பு கருதி கைவிடப்பட்டது.
இந்த தொடரில் ஒலி ராபின்சன் அதிகபட்சமாக 21 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்திலும், இரண்டாவது இடத்தில் 18 விக்கெட்டுகளுடன் ஜஸ்பிரித் பும்ராவும், 15 விக்கெட்டுகள் உடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதனிடையே இந்த மூன்று பந்துவீச்சாளர்களில் எந்த பந்துவீச்சாளர் இந்த டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடினார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ஜஸ்பிரித் பும்ரா என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான டேவிட் கோவர் விளக்கமளித்துள்ளார்
காரணம் நான்காவது டெஸ்ட் போட்டியில் 368 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இங்கிலாந்து அணி டார்கெட்டை சேஸ் செய்த நிலையில் பும்ரா மிக அற்புதமாக மிடில் ஆர்டரில் வந்த களமிறங்கிய போப் மற்றும் பேர்ஸ்ட்ரோ விக்கெட்டுகளை கைப்பற்றி நெருக்கடியை ஏற்படுத்தினார் என டேவிட் கோவர் தெரிவித்துள்ளார்.