மோசமான பவுலிங் ஆக்சன்; பும்ராவை தடை செய்யணும் - கொந்தளிக்கும் ஆஸ். ரசிகர்கள்!
பும்ராவை தடை செய்யக்கோரில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.
பும்ரா பவுலிங்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன.
இதில், கேப்டன் ரோஹித் சர்மா விடுப்பில் இருக்கும் நிலையில், தற்காலிக கேப்டனாக பும்ரா பொறுப்பேற்றுள்ளார். பும்ரா மட்டுமே 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
ரசிகர்கள் கொதிப்பு
அடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி தனது 11வது "5 விக்கெட் ஹால்" சாதனையை செய்தார். தொடர்ந்து பும்ரா பந்து வீசுவது சர்வதேச கிரிக்கேட் கவுன்சில் விதிகளுக்கு புறம்பானது.
அவரது முழங்கை மடிந்து இருப்பதாகவும், அவர் பந்தை எறிவதாகவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். இதற்கிடையில் இதுகுறித்து விளக்கமளித்திருந்த இங்கிலாந்து வீரரும், பவுலிங் பயிற்சியாளருமான இயான் பான்ட்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளில் இருக்கும் ஹைப்பர் மொபைலிட்டி (Hypermobility) என்ற விதிமுறையின்படி பும்ராவின் பந்துவீச்சு விதிகளுக்கு உட்பட்டது தான் எனத் தெரிவித்துள்ளார்.