"அப்பா, உங்க கூட இருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் நான் கத்துக்குறேன் " - விஜய் மகனின் உருக்கமான பதிவு

vijay jasonsanjay vijay29years
By Irumporai Dec 05, 2021 10:30 AM GMT
Report

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் விஜய்க்கு என்று லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் நடிகராக அறிமுகமாகி நேற்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் நடிகர் விஜயின் 29 ஆண்டுகள் நிறைவு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரைப்பிரபலங்களும், அவரது ரசிகர்களும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய்க்கு அவரது மகன் சஞ்சய் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். சஞ்சய் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “ 29 வருடங்களை நிறைவு செய்து, அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதற்கு வாழ்த்துக்கள் அப்பா

நான் உங்களுடன் செலவழிக்கும் ஒவ்வொரு நொடியும் நான் கற்றுக்கொண்டதே. வரவிருக்கும் ஆண்டுகளில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் பெற விரும்புகிறேன்

விஜயின் மகன் சஞ்சயின் ட்விட்டர் பதிவை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். விஜயைப் போன்றே தோற்றத்தில் உள்ள சஞ்சய் விஜய்க்கு இப்போதே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

மேலும், அவரை நடிக்க வைப்பதற்காக பல இயக்குநர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இயக்குநராக வேண்டும் என்ற கனவு உள்ள சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சார்ந்த படிப்பை பயின்று வருகிறார்.