நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் புகைப்படம் வைரல்

Vijay Viral Photos jason sanjay
By Yashini Mar 11, 2026 06:02 AM GMT
Report

நடிகர் விஜயின் மகன் ஜோசன் சஞ்சய்யின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்.

தனக்கு வெற்றி கொடுத்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என சினிமாவில் நடிப்பதை நிறுத்தி அரசியலில் களமிறங்கியுள்ளார்.

சினிமாவில் இருந்து வெளியேற விஜய் முடிவு செய்த நேரத்தில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக சினிமாவில் என்ட்ரி கொடுக்கிறார்.

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்யின் புகைப்படம் வைரல் | Jason Sanjay Picture Viral On Social Media

இந்நிலையில், வெளிநாட்டில் தனது படிப்பை முடித்த ஜேசன் சஞ்சய், தற்போது இயக்குநராக தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சிக்மா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார்.

ஆக்ஷன் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஜேசன் சஞ்சய் மக்களுடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.