குஜராத் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல் - ரசிகர்கள் கவலை
ஐபிஎல் தொடரில் பங்கேற்கவுள்ள குஜராத் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் 15வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்த முறை குஜராத், லக்னோ ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தமுள்ள 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே வழக்கம்போல ஒரு சில வீரர்கள் இந்த தொடரில் இருந்து வெளியேறிய வண்ணம் உள்ளனர். அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியில் இருந்து இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஜேசன் ராய் விலகியுள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அவர் குஜராத் அணிக்காக விளையாட 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.ம்முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது அதிரடியை ஆரம்ப போட்டிகளில் இருந்து வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அவர் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
கொரோனா பயோ பபுள் காரணமாக தன்னால் இரண்டு மாத காலம் இருக்க முடியாது என்பதால் இந்த சீசனில் இருந்து வெளியேற விரும்புவதாக ஜேசன் ராய் கூறியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.