என்னை திட்டிய பேர்ஸ்டோவை அவுட் செய்த பும்ராவுக்கு நன்றி - ரசிகர் ஜார்வோ மகிழ்ச்சி
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் விளையாட்டில் மைதானத்தில் அத்துமீறி நுழைந்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜார்வோ.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் மைதானத்தில் ஜார்வோ அத்துமீறி நுழைந்தார்.பின்பு பும்ரா பந்து வீச காத்திருந்த போது தீடீரென ஜார்வோ பந்து வீசினார்.
இதையடுத்து அவரை காவலர்கள் வெளியேற்றினர்.இந்த காட்சிகளால் மக்கள் மத்தியில் கவனம் பெற்றார்.
இந்நிலையில் தனது முகநுால் பக்கத்தில் ஓவல் டெஸ்ட் ஆடுகளத்தில் நுழைந்த போது என்னை திட்டிய இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவை டக் அவுட்டாக்கிய இந்திய வீரர் பும்ராவுக்கு நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.